About Us

Our Story

M.S. சித்தா சிகிச்சை மையம்

                                        M.S. சித்தா சிகிச்சை மையம் 2007 ஆம் ஆண்டு வைத்தியர்  மு.சுகவனேஸ்வரன் அவர்களால் துவங்கப்பட்டது. மக்களின் அனைத்து உடல் உபாதைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பட்டம் பெற்ற சித்தா மருத்துவர்களையும், அனுபவம் வாய்ந்த பாரம்பரிய சித்தா வைத்தியர்களையும் கொண்டு சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்குகிறது. நமது சிகிச்சை மையம் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்களால் பாரம்பரிய முறையில் முழுவதும் மூலிகைகளை கொண்டு விரைவில் பலன் அளிக்கக்கூடிய வகையில் தரமான மருந்துகள் தயாரிக்கப்பட்டு அம்மருந்துகளால் சிறப்பு சிகிச்சைகளை வழங்குகின்றது. மேலும் சிகிச்சை மையத்தில் சித்த மருந்துகள் தயாரிக்கும் செய்முறை பயிற்சிகளும் வர்ம மருத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்  பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளை குணப்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் நம்பிக்கைக்குரிய சிகிச்சை மையமாக திகழ்கிறது. மேலும் இச்சிகிச்சை மையம் இதுவரை 4 இலவச சித்த மருத்துவ முகாம்களை நடத்தி  பெருமளவு மக்களின் ஆதரவை பெற்று சிறந்து விளங்குகிறது.

இன்றளவும் இலவச மருத்துவர் ஆலோசனை நடைமுறையில் உள்ளது.

வைத்தியர்  மு.சுகவனேஸ்வரன் 

                     சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மு.சுகவனேஸ்வரன் அவர்கள் இளநிலை வரலாறு அண்ணாமலை பல்கலைகழகத்திலும், ஜோதிடவியல் மதுரை காமராஜர் பல்கலைகழகத்திலும் பின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் “யோகா” ஆசிரியர் பட்டமும் பெற்றுள்ளார். திருவாடுதுறை ஆதினத்தில் சைவசித்தாந்தம் பயின்று இன்றும் சன்மார்க்க நெறியில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். இவர் தந்தை நா.முத்துசாமியிடம் மருத்துவம் கற்க ஆரம்பித்து அதனை தொடர்ந்து பல பாரம்பரிய மருத்துவர்களிடம் நேரடியாக சென்று சித்த மருத்துவ முறைகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். இருபது ஆண்டுகளாக சித்த மருந்துகளை செய்துவரும் இவர் மருந்துகளை பல பாரம்பரிய அணுபவ மருத்துவர்கள் மற்றும் பட்டாதாரி மருத்துவர்களுக்கு வழங்கியும் வருகிறார். M.S. சித்தா சிகிச்சை மையம் என்ற பெயரில் இவரால் ஆரம்பிக்கப்பட்டு பட்டதாரி மருத்துவர்களை கொண்டு சிறப்பரக சிக்ச்சையும் அளிக்கப்பட்டுவருகிறது. M.S. சித்தா சிகிச்சை மையத்தின் நிறுவனர் ஆன இவர் அனுபவ சித்த மருத்துவம், பாடாணங்களும் உலோகங்களும், ராஜமருந்துகள் போன்ற சித்த மருத்துவ நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளார். மேலும், சித்த மருத்துவ கருத்தரங்கு நடத்தியும், மருத்துவர்களுக்கு மருந்து செய்முறை பயிற்சி கொடுத்தும் வருகிறார். மேலும் குருதல மருத்துவப் பயிற்சி நடத்த முயற்சி எடுத்தும் வருகிறார். 

வைத்தியர்  மு.சுகவனேஸ்வரன் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள் :

அனுபவ மருத்துவம்

ராஜ மருந்துகள்

பாடானங்களும் உலோகங்களும்

IMG-20200701-WA0005

ஆரோக்கிய வாழ்விற்கான அருமருந்துகள்

Call Today

9952831756

Kalpaganur (Po), Attur (Tk), Salem (Dt).